தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியை சேர்ந்தவர் வேந்தர் பாலா இவர் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தில் தேனி மாவட்ட தலைவராக இருந்து பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி தற்போது அண்ணாமலையின் இயக்கத்தில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
இவருக்கு ராஜலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று ஸ்ரீகாந்த் என்கிற மகன் உள்ளான்.
இந்த நிலையில் பாலாவிற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு அந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டு தனது மனைவி மற்றும் மகனை கவனித்துக் கொள்ளாமல் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.
இதனால் ராஜலட்சுமி மற்றும் ஸ்ரீகாந்த் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டு வந்த நிலையில் தங்களை விட்டுச்சென்ற தனது தந்தை பாலாவுடன் மகன் ஸ்ரீகாந்திருக்கு கோபம் ஏற்பட தந்தையுடன் அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு அடிதடி சண்டையாகவும் தொடர்ந்து அரங்கேறி வந்துள்ளது.
இந்த நிலையில் மகன் மீது ஆத்திரம் அடைந்த பாலா தனது மகனை கொலை செய்ய திட்டமிட்டு கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சமாதானம் பேசுவதற்காக தனது மகனை தேனி அருகே உள்ள வயல்பட்டி பகுதிக்கு வர சொல்லி கூறியிருக்கிறார்.
இதனை அடுத்து அங்கு சென்ற ஸ்ரீகாந்தை மது போதையில் இருந்த பாலாவின் நண்பர்களான அலெக்ஸ் பாண்டியன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் துண்டை வைத்து ஸ்ரீகாந்தை கட்டிய நிலையில் கசாப்பு கடை அருவாளை கொண்டு பாலா தனது மகனை பாறையில் வைத்து துண்டு துண்டாக கொடூரமாக வெட்டி முல்லைப் பெரியாற்றில் தூக்கி வீசி எரிந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து போலீசாரிடம் சிக்க கூடாது என்பதற்காக மகனை வெட்டிய அருவாளை அரண்மனை புதூர் விளக்கு அருகே உள்ள குளத்தில் தூக்கி வீசி எறிந்து விட்டு சென்றனர்.
இதனை தொடர்ந்து வீட்டிற்கு வராத தனது மகனை காணவில்லை என தாய் ராஜலட்சுமி தேனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வந்தனர்.
இந்த நிலையில் வேந்தர் பாலா மீது சந்தேகம் இருப்பதாக மதுரை உயர் நீதிமன்றத்தில் ராஜலட்சுமி அளித்த புகாரின் பேரில் சிபிசிஐடிக்கு வழக்கை மாற்றி விசாரணை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பின்னர் இது குறித்து விசாரணையை தொடங்கிய தேனி சிபிசிஐடி போலீசார் அலெக்ஸ் பாண்டியன் மற்றும் வேந்தர் பாலாவை கைது செய்து சிபிசிஐடி அலுவலகம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் மகனை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசி கொலை செய்தது தெரிய வந்தது.
இதனை அடுத்து இரண்டு பேரை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அழைத்துச் சென்று கொலை எப்படி செய்தார்கள் என்பது குறித்து விசாரணை செய்தனர்.
தொடர்ந்து பாலாவையும், அலெக்ஸ் பாண்டியன் ஆகியோரை கைது செய்த சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் சென்றனர்.
மேலும் இதில் தலைமறைவாக உள்ள கருப்பசாமியை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தான் பெற்ற மகனையே நண்பர்கள் உதவியுடன் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில் தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் தேனியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது......