போடிநாயக்கனூரில் உள்ள ஏலக்காய் தொழிலதிபர் இல்லத்தில் பட்டப் பகலில் நுழைந்த முகமூடி கும்பல் விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் 53 ஆயிரம் ரூபாயை திருடிய நிலையில் அதனை தடுக்கச் சென்ற நபரை கத்தியால் தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.!


தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வ. உ. சி பகுதியை சேர்ந்தவர் பாலாஜி இவர் ஏலக்காய் தொழில் செய்து வருகிறார் சம்பவம் நடந்த அன்று திருமணத்திற்காக வெளியூர் சென்று இருந்த நிலையில் இதனை நோட்டமிட்ட முகமூடி அணிந்த கும்பல் நான்கு பேர் வீட்டில் புகுந்து வீட்டில் உள்ள விலை உயர்ந்த பொருட்களான வாட்ச்   வெள்ளி காயின் மற்றும் 53 ரூபாய் ரொக்க பணத்தை திருடிய நிலையில் வீட்டில் அருகில் உள்ள நபர் வீடு திறந்து இருப்பதை கண்டு சத்தமிடவே சத்தமிட்டவரை கத்தியால் தாக்கி  தேனி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் காரில் தப்ப முயன்ற பொழுது பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் அவர்களை மடக்கிப்பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். பொதுமக்கள் தாக்கியதில் ஒரு நபர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மற்றொரு நபர் காவல் துறையினால் பிடிக்கப்பட்டது.  

இக்கொல்லை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை போடிநாயக்கனூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை செய்ததில் இவர்கள் நான்கு பேரும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று திருடுவதை தொழிலாக கொண்டுள்ள சரித்திர ஏடு குற்றவாளிகள் என்றும் இவன் தலைவன் முத்துப்பாண்டி தப்பி ஓடிய நிலையில் மிஞ்சிய இருவரில் ஒருவன் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சதீஷ்குமார் ஒருவன் சிக்கி உள்ளான் என்றும் மற்றொருவன் ராஜு தப்பியுள்ளான் என்றும் காவல்துறை தெரிவித்தனர். 

பட்டப் பகலில் கொடூர ஆயுதங்களுடன் முகமூடி அணிந்த திருட்டு கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து திருடி தடுக்க முயன்றவரை கத்தியால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது......
Previous Post Next Post