மத்திய நிர்வள ஆணைய தலைவரிடம் கடந்த ஜூன் 24ஆம் தேதி மேகதாட்டு வரைவு திட்ட அறிக்கையை திருப்பி அனுப்ப கோரினோம், ஜூன்29ஆம் தேதியே கர்நாடகாவிற்கு திருப்பி அனுப்பியதை வரவேற்கிறோம்
பிஆர்.பாண்டியன்
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர்.பாண்டியன் தஞ்சாவூரில் செய்தியார்களிடம் தெரிவித்ததாவது:
காவிரி டெல்டா பாலைவனமாக காட்சியளிக்கிறது. குடிநீருக்கு பரிதவிக்கிறார்கள்.
இந்நிலையில் காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்று குழு பரிந்துரையை ஏற்று 15 தினங்களுக்கு வினாடிக்கு 3500 கன அடி வீதம் தண்ணீரை 29ஆம் தேதி அதிகாலை பிலிகுண்டுவில் வெளியேற்ற வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.உத்தரவை ஏற்க கர்நாடக முதலமைச்சர் மறுத்து மேல்முறையீடு என்று அறிவித்துள்ளார்.
இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் மத்திய அரசின் உதவியை பெற்று தண்ணீரை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கர்நாடக முதலமைச்சர்
டி கே சிவகுமார் தமிழக முதலமைச்சர் ஆகஸ்டு 3ல் பெங்களூர் வருகை தரும் போது கர்நாடக காவிரி நீர் பிடிப்பகுதிகளையும், அணைகளையும் பார்வையிடுவதற்காக தனி ஹெலிகாப்டரை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளார்.
அவ்வாறு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் கர்நாடக பகுதிகளை பார்வையிடுவாரேயானால், திரும்பி வரும்போது கர்நாடக முதலமைச்சர் டி கே சிவகுமார் உடன் அழைத்து வந்து தமிழக காவிரி டெல்டாவை பார்வையிட வேண்டும்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி இல்லாமல் எந்த ஒரு பேச்சு வார்த்தை நடத்துவதும், அணைகளை பார்வையிடுவதும் உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் நடவடிக்கையாகும்.இந்நிலையில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா கேள்விக்கு பதில் அளித்த மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி இல்லாமல் மத்திய அரசு சுற்றுச்சூழல் துறையோ, வனத்துறையோ அனுமதி வழங்க இயலாது என்பதை தெளிவு படுத்தி பாராளுமன்றத்தில் தெரிவித்து உள்ளனர். இதனை தமிழக முதலமைச்சர் உணர்ந்து
செயல்பட முன்வர வேண்டும்.
கடந்த ஜூன் 24 ஆம் தேதி மத்திய அரசின் நீர்வள ஆணைய தலைவர் அனுபம் பிரசாத்,மேகதாட்டு அணைக்கான பொறுப்பு அதிகாரி யோகேஷ் பாட்டன்கர் ஆகியோரை சந்தித்து 2022-ல் காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவின் மேகதாட்டு வரைவு திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பி விட்டது.அதனை இதுவரையிலும் தாங்கள் இருப்பில் வைத்திருப்பதால் கர்நாடகம் தமிழகம் இடையே தொடர்ந்து பிரச்சனை எழுந்து வருகிறது. உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் என வலியுறுத்தி கடிதம் கொடுத்து
எடுத்துரைத்தோம் அதனடிப்படையில் கடந்த ஜூன் 29ஆம் தேதி கர்நாடகாவிற்கு திருப்பு அனுப்பி விட்டதாக வெளிவந்திருக்கிற செய்தி வரவேற்கத்தக்கது.
பாராளுமன்றத்தில் ஜல்சக்தி துறை இணை அமைச்சர் ராஜ்பூஷன் உண்மைக்கு புறம்பான தகவலை வெளியிட்டுள்ளார்.உச்ச நீதிமன்றம் உத்தரவு பக்கம் 241 ல் கிளாஸ் 11ல் மிகத் தெளிவாக கீழ் பாசன விவசாயிகள் அனுமதி இல்லாமல் மேற்பகுதி மாநிலங்கள் அணைகட்ட இயலாது என தெளிவுபடுத்தி உள்ளது என்றார்.
தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் பிரபாகரன்
உயர் மட்டக்குழு உறுப்பினர் பா அசோகன், இயற்கை வேளாண்மைக்கான தமிழக ஒருங்கிணைப்பாளர் சதீஷ், ஒரத்தநாடு மேற்கு ஒன்றிய செயலாளர்
ரவிமாறன் ஆகியோர்
உடன் இருந்தனர்.