மாற்றுக் கட்சியினர் 500-க்கும் மேற்பட்டோர் தவெக-வில் இணைவு - கம்பம் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் நடைபெற்றது.!

தேனி மாவட்டம், கம்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சின்னமனூர் ஒன்றியம், சின்ன ஓவுலாபுரம் கிராமத்தில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா தலைமையில் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைத்துக் கொண்டனர்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) சின்னமனூர் ஒன்றியச் செயலாளர் நீதி தலைமையில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக), திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) மற்றும் அமமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் தவெக-வில் இணைந்தனர்.

கட்சியில் இணைந்த புதிய உறுப்பினர்கள் அனைவருக்கும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் கட்சியின் துண்டை அணிவித்து, வாழ்த்தி வரவேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:
"நாம் கடந்த காலத்தில் 35 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தோம். ஆனால், தற்போது மாற்றுக் கட்சிகளில் இருந்து ஏராளமானோர் நம்முடன் இணைந்து வருவதால், நமது கட்சியின் பலம் 65 சதவீதமாக உயர்ந்துள்ளது."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.....
Previous Post Next Post