திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வ.உ.சி சாலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் அனைத்து துறைகளிலும் ஊழல் மற்றும் லஞ்சத்தை தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற கையெழுத்து இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொதுமக்கள் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்று கையெழுத்திட்டனர். இந்நிகழ்ச்சியில் மன்னார்குடி வட்டார காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏராளமானார் பங்கேற்றனர். கையெழுத்து இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சியில் .டி பி டி செந்தில் மாநிலச் செயலாளர்
எஸ்.எஸ் செல்வராஜ் மன்னார்குடி வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர், மற்றும் வி எம் கலியபெருமாள் திருவாரூர் மாவட்ட துணை தலைவர் , திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நீலன் அசோகன் மற்றும் கோவிந்தராஜ்,ஆதித்தன்,பத்மநாபன்,ராஜபாண்டி, ஆகியோர் கலந்து கொண்டனர்.