முதலமைச்சர் டிராபி 2026 கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி!!


திருப்பூர்: ஜூலை-02 கணியாம்பூண்டி பகுதியில் உள்ள Z3 கிரிக்கெட் மைதானத்தில் தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் மற்றும் தமிழ்நாடு டென்னிஸ் கிரிக்கெட் அசோசியேஷன் இணைந்து நடத்தும் தளபதி டிராபி 2026  கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியினை திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பாலமுருகன் துவக்கி வைத்தார்.


தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் மற்றும் தமிழ்நாடு டென்னிஸ் கிரிக்கெட்  அசோசியேசன் இணைந்து நடத்தும் தளபதி டிராபி  2026 கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி யினை திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பாலமுருகன் துவக்கி வைத்தார்.
கிரிக்கெட் மைதானத்தில் தவெக கட்சி கொடியினை ஏற்றி வைத்தார்.பின்னர் கிரிக்கெட் வீரர்களை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பாலமுருகனுக்கு போட்டியின் ஒருங்கிணைப்பாளர் ஷாபி,அறிமுகம் செய்து வைத்தார்.மேலும் ஜூலை 1 முதல் 5 -ந் தேதி வரை மாநில அளவில் நடைபெறும் இந்த கிரிக்கெட் போட்டியில் 24 மாவட்டங்களை சேர்ந்த அணியினர் பங்கு பெற்றுள்ளனர்.

 இந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.10 லட்சம், வழங்கப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில் தாவெக மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் குத்புதீன் மற்றும் தவெக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post