திண்டிவனத்தில் 2நாட்களாக உழவர்சந்தை, அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து வரும் அமைச்சர் வன்னியரசு
மரக்காணம்மேற்கு ஒன்றியம், அன்னம்புத்துார்அதனை சுற்றியுள்ள 20கிராமங்களைச் சேர்ந்த பொதுமக் களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் சிறப்புமுகாம் நடந்தது.
இந்த முகாமில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, அனைவருக்கும் நன்றிகூறினார் மேலும் கிராம மக்களிடமிருந்து, வீட்டு மனைப் பட்டா,முதியோர் உதவித் தொகை, குடிநீர்வசதி,சாலைவசதிகள்
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.இதில் மாற்றுத்திறனாளியான12-ம் வகுப்பு மாணவி மோனிகா மாயகிருஷ்ணன் அமைச்சர் வன்னி அரசுக்கு வாழ்த்துக்கள் கூறி சால்வை அணிவித்தும் கோரிக்கை மனு அளித்தார்
இந்நிகழ்ச்சியில்
சார்ஆட்சியர்ஆகாஷ், மரக்காணம் ஒன்றிய சேர்மன் தயாளன், துணைச் சேர்மன் பழனி,மாவட்டத் துணைச் சேர்மன் ஷீலாதேவி சேரன்,தாசில்தார் ஏழுமலை,பி.டி.ஓ., சிலம்பரசன், மாவட்டத் துணைச் செயலாளர் அ.சசிகுமார், மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் இளஞ்சேரன்,நகர செயலாளர் இமயன்,விஸ்வதாஸ் உள்ளிட்ட ஏராளமானேர் பங்கேற்றனர்.