திருவாரூரில் பஜாஜ் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் தீவிபத்து . மூன்று தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைத்தனர்.



திருவாரூர் பைபாஸ் சாலையில் பிரபல பஜாஜ் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் இரவு  பூட்டி சென்ற சிறிது நேரத்தில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது உடனடியாக அருகில் இருந்தவர்கள் பார்த்து திருவாரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மூன்று தீயணைப்பு வாகனங்கள் மூலம்  சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

தீ விபத்தில் அலுவலக அறைகள் மற்றும் பேட்டரி ரூம் முற்றிலுமாக தீ எரிந்து சேதம் அடைந்தது .
இருசக்கர வாகனங்கள் எந்த சேதமும் இல்லை என திருவாரூர் நகர போலீசாரின் விசாரணையில் முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த தீ விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Previous Post Next Post