கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த ஜம்புகுட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சத்தியசீலன் (50). விவசாயியான இவர் ரியல் எஸ்டேட் வியாபாரமும் செய்து வருகிறார், இந்நிலையில் நேற்று இரவு வீடு திரும்பாமல் இருந்துள்ளார். சந்தேகமடைந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் தேடிப்பார்த்துள்ளனர்.
இன்று காலை அவரது விவசாய நிலத்தில் ரத்த வெள்ளத்தில் உயிரிழிந்திருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து அங்கு சென்று பார்த்தபோது, தலையில் வெட்டு காயத்துடன் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போச்சம்பள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பிறகு பர்கூர் காவல் துணை கண்காணிப்பாளர் தனசேகர், கைரேகை நிபுனர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கொலைக்கான காரணத்தை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மீட்கப்பட்ட உடலை உடற்கூறு ஆய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவரமாக விசாரித்து வருகின்றனர்.