திருவாரூர் : 13.05.2026
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே கோவில் சித்தமல்லி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் மற்றும் மணிமண்டபம் திறப்பு விழா ,பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் கோ.பழனிச்சாமி மாநில செயற்குழு உறுப்பினர் வை.சிவபுண்ணியம் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் மணிமண்டபத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர் பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் பிறப்பால் யாரும் உயரவில்லை தாய் வயிற்றில் பிறந்தவர்கள் அனைவரும் சமம் என்கிற அறிவியல் கருத்தை பாட புத்தகத்தில் புகுத்த வேண்டும் எனவே இந்த சமூகம் மாற வேண்டும் மாறுமா என கேட்டால் கண்டிப்பாக மாறும் யாரும் எதிர்பார்க்காத மாற்றத்தை தேர்தலில் வந்த போது நாம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் அறிவியல் பூர்வமான விடுதலை மாற்றம் இந்த மண்ணில் ஏற்படும் தமிழகத்தில் யார் வேணாலும் அரசியலுக்கு வரலாம் திமுக நல்ல வாக்குகளை பெற்றுள்ளது அதிமுக நல்ல வாக்குகளை பெற்றுள்ளது இருவரும் பெற்றுள்ள வாக்குகள் அதிகம் இருவரும் இருவருடைய சேர்த்தால் அந்தளவிற்கு வாக்குகளை பெற விட்டாலும் தமிழக வெற்றி கழகம் தமிழகத்தில் அதிக இடங்களை பெற்றுள்ளது அதிக இடங்களை பெற்றுள்ள தமிழக வெற்றி கழகம் பாஜக உள்ளிட்ட வேறு யாரிடமும் ஆதரவு கேட்கவில்லை சிபிஐ சிபிஎம் விடுதலைச் சிறுத்தை எங்களை ஆதரிக்க வேண்டும் நாங்கள் ஆட்சி அமைக்க அந்த கோரிக்கையை ஏற்று கட்சியிடம் தெரிவித்தோம் கட்சி உதவி செய்தது ஜனாதிபதி ஆட்சி வந்தால் ஆளுநர் அமர்வார் ஆறு மாதமோ ஒரு வருடமோ ஆளுநர் ஆட்சி செய்து வருவார் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சிக்கு நேர் எதிராக ஆளுநர் இருப்பார் அதிமுக ஆட்சிக்கு வந்தாலும் பரவாயில்லை திமுக ஆட்சிக்கு வந்தாலும் பரவாயில்லை தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்தாலும் பரவாயில்லை ஆனால் ஜனநாயகத்திற்கு புறம்பாக தான் ஆளுநர் நடந்து கொள்கிறார் எனவே ஆளுநர் ஆட்சி வரக்கூடாது என்பதற்காக தான் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்தோம்.