பட்டியல் சமுதாய மக்களுக்கு வழங்கப்பட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக சர்வே எண் 1801/2 1804 1806/5 158 நபருக்கு வழங்கிய இடத்தினை ஆக்கிரமிப்பு செய்தவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி தமிழ் புலிகள் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தை கட்சியின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் தலித் மக்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக வழங்கிய பட்டா இடத்தினை உடனே வழங்க கோரி தமிழ் புலிகள் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தை கட்சிகள் சார்பாக ஆக்கிரமிப்பு செய்த தனிநபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அம்மாபட்டி விலக்கு பகுதியில் பட்டியல் இன மக்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக சர்வே எண் 1801/2, 1804, 1806 என்ற இடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இடத்தினை உத்தமபாளையத்தை சேர்ந்த தனிநபர் ஆக்கிரப்பு செய்யப்பட்டதாக கூறி அவரிடமிருந்து இடத்தினை மீட்டு 158 பட்டியல் சமுதாய மக்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரி தமிழ் புலிகள் கட்சி சார்பாக மாவட்ட முதன்மைசெயலாளர் முகிலரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உத்தமபாளையம் பைபாஸ் திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.
தனிப்பட்ட ஒரு நபர் சிலருடன் இணைந்து பட்டியல் சமுதாய மக்களுக்கு வழங்கப்பட்ட இடத்தினை அரசு உடனடியாக மீட்டு மீண்டும் பட்டியல் சமுதாய மக்களுக்கு வழங்க வேண்டும் என்று கண்டன உரை எழுப்பப்பட்டது.
தொடர்ந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கம்பம் தொகுதி மாவட்ட செயலாளர் மணிவண்ணன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் பெர்க்மான்ஸ் மாவட்ட துணை செயலாளர் அண்ணாதுரை தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் மாநில வழக்கறிஞர் அணி கனியரசு ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தமிழ் புலிகள் கட்சியினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் பொது மக்களும் கலந்து கொண்டு அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.......