திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வலியுறுத்தி திருவாரூர் வர்த்தக சங்கம் சார்பில் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு.

திருவாரூர் 19.5.26


திருவாரூர் கடைவீதியில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் டாஸ்மார்க் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. அங்கு மது பாட்டிலை வாங்கி அருகே உள்ள கடைகளில் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யு வகையில் அமர்ந்து மது அருந்தி வருகின்றனர் இதனால் பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வர்த்தகர்கள் சார்பில் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை கடையை மூட வலியுறுத்தி வர்த்தக சங்கம் சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை மறியல் செய்தும் இந்த நடவடிக்கை எடுக்காத நிலையில் தற்போது தமிழக முதல்வர் பேருந்து நிலையம் பகுதியில் இருந்து ஐநூறு மீட்டர் அளவில் உள்ள அனைத்து டாஸ்மார்க் கடைகளையும் மூட உத்தரவிட்ட நிலையில் இந்த டாஸ்மாக் கடை அமைந்துள்ளது . இதனை மூட வேண்டும் என வர்த்தகர் சங்க தலைவர் பாலமுருகன் தலைமையில் போலீசாரின் அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் நடத்த இருந்த நிலையில் திருவாரூர் வட்டாட்சியர் இளங்கோ மற்றும் நகர காவல் ஆய்வாளர் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் நாளை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்படும் பேச்சுவார்த்தையில் உரிய முடிவு எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. 

இந்த போராட்ட அறிவிப்பு காரணமாக டாஸ்மாக் கடை முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட வர்த்தக சங்கத்தினர் திரண்டதால் அப்போதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது  குறிப்பிடத்தக்கது.

FILENAME TVR TASMAC  AGAINST ARPATTAM NEWS 19.5.26
Previous Post Next Post