திருவாரூர் 19.05.2026
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் பசீர் அகமது மகன் ஹாஜா முகைதீன் (38), இவர் ஒரு தனியார் தொலைக்காட்சியின் (நீயூஸ் ஜெ) செய்தியாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்றிரவு வழக்கம் போல் செய்தி பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு தூக்கி கொண்டு இருந்தார், அப்போது நள்ளிரவு சுமார் 11.45 மணியளவில் ஏற்கனவே கஞ்சா வழக்கில் கைதாகி விடுதலையில் வந்திருந்த சலீம் மகன் அப்துல் பாசித் தலைமையில் மூன்று பேர் கொண்ட ஒரு கும்பல் ஹாஜா முகைதீன் வீட்டுக்கு சென்று கதவைத் தட்டி உள்ளனர். அப்பொழுது அவரது மாமியார் கதவை திறந்த போது ஹாஜா மைதீனிடம் பேச வேண்டும் என்று அந்த கும்பல் கூறியுள்ளது. உடனே வீட்டுக்குள் இருந்த ஹாஜா முகைதீன் வீட்டு வாசல் கேட்ட அருகே சென்று, கேட்ட பொழுது அப்துல் பாசித் தன்னை கோவிலூரை சேர்ந்த ஒருவர் தாக்கி விட்டதாகவும் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தபோது போலீசார் புகார் ஏற்கவில்லை என்றும், நீங்கள் வந்து சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். உடனே கதவைத் திறந்த ஹாஜா முகைதீன் வெளியில் வந்து மேலும் இது குறித்து கேட்டு பேசிக் கொண்டிருக்கும் போதே, அப்துல் பாசித் இடுப்பில் சொருகி வைத்திருந்த பாட்டிலால் தலையில் அடித்து, மேலும் தலை, நெஞ்சு உள்ளிட்ட உடலில் பல பகுதிகளில் பாட்டிலால் அந்த கஞ்சா கும்பல் குத்தி காயப்படுத்தியதுடன், அவரின் செல்போனையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி உள்ளது, இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினரும், அப்பகுதி மக்களும் முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் செய்தியாளரை சேர்த்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர் ஹாஜா முகைதீன் தற்பொழுது தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நள்ளிரவில் துணைச்சலாக கஞ்சா கும்பல், ஒரு பத்திரிக்கையாளரை வீடு புகுந்து தாக்கிய சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.