திருவாரூர்
19.05.26
கடந்த மே மாதம் மூன்றாம் தேதி நாடு முழுவதும் 23 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். ஆனால் ஒரு சில இடங்களில் நீட் வினாத்தாள் வெளியானதாக கூறி நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக் கோரியும், நீட் வினாத்தாள் வெளியாகி மோசடிக்கு காரணமான தேசிய தேர்வு முகமையை கலைக்க வலியுறுத்தியும், திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு இடதுசாரி மாணவர் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்களின் எதிர்காலத்தை காப்பதற்காக நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும், ஒன்றிய அரசை கண்டித்தும் கண்டனம் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
FILENAME : TVR NEET AGAINST PROTEST NEWS