நெடுங்கல் அருகே என்.மோட்டூர் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மாரியம்மன் மற்றும் சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா


கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள நெடுங்கல் அடுத்த என்.மோட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு  ஸ்ரீ மாரியம்மன் மற்றும் சுந்தர விநாயகர் ஆலய  அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா இன்று  நடைபெற்றது. முன்னதாக வேள்வி குண்டத்தில் பூஜைக்கப்பட்ட  புனித நீர் கலசங்களை ஆச்சாரியர்கள் தங்கள் தலையில் சுமந்தபடி மேளத்தாளங்களுடன் ஊர்வலம் சென்று கோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு வேத மந்திரங்கள் முழங்க கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் புனித நீரை பக்தர்கள் மீது தெளித்தனர். 
மூலவர் தெய்வங்களுக்கு மஹா அபிஷேகம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது. இதில்  2000 மேற்பட்ட பொது மக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் என்.மோட்டூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா மோட்டூர் நித்தியானந்தம் பாஸ்கரன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது மற்றும் கிராம பொதுமக்கள் விழாக்குழுவினர் மிகச்சிறப்பாக செய்திருந்தனர்.
Previous Post Next Post