.............................................
கிருஷ்ணகிரி கே. ஆர்.பி. அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மூலம்,
சுண்டே குட்பம், அவதானப் பட்டி, மரிக்கம்பள்ளி திம்மாபுரம், நரிமேடு, தளிஹள்ளி ஹால்வே ஹள்ளி என 18 ஊராட்சிகளை சேர்ந்த சுமார் 9 ஆயிரம் ஹெக்டேர் பரப்பரளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது,
அணையில் இருந்து குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதல் இரண்டாம்
பேகச்சாகபடி விவசாயிகள் எதிர்பார்த்தப்படி அமோக விளைச்சல் கண்டுள்ளது, அறுவடை செய்யும் பணிகளில் விவசாயிகள் ஆர்வம் காட்டி உள்ளனர்
இது குறித்து பாசன விவசாயிகள் சங்கத்தினை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன் கூறுகையில் பெருந்தலைவர் காமராஜரால் கட்டப்பட்ட கே.ஆர்.பி. அணையின் மூலமாக ஆண்டுதோறும் இரு போகம் நெல் சாகுபடி செய்து வருகிறோம் ,
தற்போது இரண்டாம் போகசாகுபடி விவசாயிகள் எதிர்பார்த்தபடி நல்ல விளைச்சல் கண்டுள்ளது, இதனால் ஏக்கருக்கு சுமார் 30 மூட்டையில் இருந்து 40 மூட்டை நெல் கிடைக்கும் ஆனால் பூச்சி மருத்துக்களின் விலை உயர்வு மற்றும் கூலி உயர்வினால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் மட்டுமே மிஞ்சுகிறது ஆகையால் ஒரு குவிண்டாலுக்கு
ரூ 3500 என விலை நிர்ணையம் செய்ய அரசு முன்வர வேண்டும் குறிப்பாக காவேரிப்படத்தில் ஒரு நெல் கொள்முதல் நிலையம் அமைத்து விவசாயிகளிடம் இருந்து
இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக நெல் கொள்முதல் செய்ய நெல் கொள்முதல் நிலையம் அமைத்திட தமிழக அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கையினை விவசாயிகள் விடுத்தனர்