நாராயணன் தேவன் பட்டி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பட்டாளம்மன் கோவில் முன்பாக இருக்கும் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி பலமுறை மனு கொடுத்தும் செவி சாய்க்காத வருவாய்த்துறை நிர்வாகம்.!!
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட நாராயண தேவன் பட்டி கிராமத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமுதாயத்திற்கு உட்பட்ட பட்டாளம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது பல தலைமுறைகளாக இக்கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிலில் முன்புற பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கில் கள்ளு கால்கள் ஊன்றி கம்பி வேலி அமைத்துள்ளனர்.
இதனால் கோவிலுக்கு செல்ல முடியாமல் அருந்ததியர் சமுதாய மக்கள் தவித்து வருவதாக கூறுகிறார்கள் இது தொடர்பாக உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் உத்தமபாளையம் வட்டாட்சியர் என வருவாய்த்துறை அதிகாரிகளிடமும் காவல்துறை அதிகாரிகளிடமும் புகார் மனு கொடுத்துள்ளனர்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காததால் இன்று நாராயணன் தேவன் பட்டி கிராமத்தில் வசிக்கும் ஒட்டுமொத்த அருந்ததியர் சமுதாய மக்களும் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் பட்டாளம்மன் கோவில் நிலத்தை மீட்டு தர கோரியும் கோவிலுக்கு பாதையை சரி செய்து கொடுக்க வேண்டிய கோஷங்கள் எழுப்பியவாறு சென்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தேர்தல் காலம் என்பதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுருந்தனர்.
இது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் அருந்ததியர் சமுதாய பொறுப்பாளர்களையும் தமிழ்ப் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் மணிவண்ணன் அவர்களையும் அழைத்து தேர்தல் முடிவிற்கு பின் மே 6ஆம் தேதி உறுதியாக வந்து உங்கள் கோவில் நிலத்திற்கு செல்லும் பாதையை எடுத்து ஆக்கிரமிப்பு அகற்றி தருவதாக வாக்குறுதி அளித்துள்ளதாக கூறுகிறார்கள்.
இல்லையேல் மக்கள் விடுதலைக் கட்சி நிறுவனர் முருகவேல் ராஜன் தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கம்யூனிஸ்ட் கட்சிகள் என அனைத்து சமூகநீதி கட்சிகளையும் அழைத்து ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என மக்கள் தெரிவித்தனர்.....
பேட்டி: மணிவண்ணன் மா.செயலாளர்
தமிழ் புலிகள் கட்சி.