நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் “பாரதியாரின் இன்பம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு விடியல் பிரகாஷ் தலைமை தாங்கினார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் “பாரதியாரின் இன்பம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு விடியல் பிரகாஷ் தலைமை தாங்கினார். சண்முகசுந்தரம் அனைவரையும் வரவேற்றார். எழுத்தாளர் கேசவமூர்த்தி ராஜகோபாலன், பழனிவேல், பஞ்சாலை சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாரதியாரின் இன்பம் மற்றும் அவரது படைப்புகளில்  உணர்வுகள் குறித்து விரிவாக கருத்துகளை பகிர்ந்தனர்.
கூட்டத்தில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிறப்பாக பேசிய மாணவர்களுக்கு பரிசு புத்தகம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், கோடைகாலத்தில் நடைபெறவுள்ள போட்டிகளில் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் நிறைவில் சௌடேஸ்வரி நன்றி கூறினார். இக்கூட்டத்தில் தீபா, மகாலட்சுமி, தேன்மொழி உள்ளிட்ட வாசகர் வட்ட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Previous Post Next Post