மன்னார்குடி அருகே பட்ட பகலில் லாரி உரிமையாளரை 5 பேர் கொண்ட கும்பல் பலத்த ஆயுதங்களால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோட்டம் சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை …..



திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அரவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சகாதேவன் -ருக்மணி. இவர்களின் மகன் சத்தியமூர்த்தி (40) இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 8ம் வகுப்பு, 7 ம் 5வகுப்பு  ஆண், பெண் மூன்று குழந்தைகளுடன் அரவத்தூர் கிராமத்தில் வசித்து வருகின்றனர்.  சத்தியமூர்த்திக்கு  சொந்தமாக லாரி வைத்துள்ளார்.    இன்று லாரி சர்வீஸ் செய்து செட்டில் போட்டுவிட்டு வீட்டுக்கு சென்ற போது சிலர் சத்தியமூர்த்திக்கு போன் செய்து  உன்னிடம் பேச வேண்டும்  என அழைத்துள்ளதாகவும் அந்த   இடத்திற்கு சத்தியமூர்த்தி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.   அதனைத் தொடர்ந்து தருசுவேலி என்னும் இடத்தில் சத்தியமூர்த்தி அரிவாளால் தலை மற்றும் கை  உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டபட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இந்த பகுதி கிராம பொதுமக்கள் பார்த்து மன்னார்குடி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்த மன்னார்குடி டிஎஸ்பி மணிவண்ணன் தலைமையிலான போலீசார் சத்தியமூர்த்தி உடலை கைப்பற்றி தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் 5 பேர் கொண்ட கும்பல் என்பது தெரிய வந்துள்ளது. கொலைக்கு முன்விரோதம்,  காரணமா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர் கொலை செய்யப்பட்ட சத்தியமூர்த்தி உடல் பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  கருண்கரட் சம்பவ இடத்தை பார்வையிட்டு குற்றவாளிகளை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர் 

மன்னார்குடி அருகே  லாரி உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த சத்தியமூர்த்திக்கு மனைவி ஜெயமாலினி , மகள்கள் கான சுதா , கானபிரியா , மகன் சுகவனம் ஆகியோர் உள்ளனர் 

Previous Post Next Post