சகாதேவன் போச்சம்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
வலசரகவுண்டனுர் ஊராட்சிக்கு உட்பட்ட கூ.மோட்டுர் அருகே பிரதான குடிநீர் குழாய் உடைப்பு: சாலையில் ஆறாக ஓடும் குடி தண்ணீர் - வாகன ஓட்டிகள் அவதி
கூச்சனூர் அருகே உள்ள மோட்டூர் கிராமப் பகுதியில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் பிரதான குழாயில் குடிநீர் பைப் உடைப்பு ஏற்பட்டது. இதனால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி சாலையில் ஆறாக ஓடுகிறது.
குழாய் உடைப்பு:
கு.மோட்டூர் கிராமச் சாலை வழியாகச் செல்லும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டக் குழாயில் இன்று காலை பலத்த சத்தத்துடன் உடைப்பு ஏற்பட்டது. குழாய் உடைந்த வேகத்தில் தண்ணீர் பல அடி உயரத்திற்கு பீய்ச்சி அடித்தது. இதனால் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்
குடிநீர் பெருக்கெடுத்துச் சாலை ஓரம் தேங்கி நிற்பதால், அந்த வழியாகச் செல்லும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் ரோட்டில், தேங்கியுள்ள தண்ணீரால் அவ்வழியாகச் செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி கீழே விலும் சூழல் நிலவுகிறது.
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் பல கிராமங்களின் தாகத்தைத் தீர்க்கும் முக்கிய ஆதாரமாக உள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள இந்த உடைப்பால் பல பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி, உடைந்த குடிநீர் குழாயை விரைந்து சீரமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.