திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் திருவாரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பூண்டி.கலைவாணனை ஆதரித்து பொதக்குடி மற்றும் வடபாதி மங்கலம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் இரா.முத்தரசன் அவர் பேசியதாவது . தேர்தல் பிரச்சாரத்திற்கு நான் வருவேன் என்று சொல்லிவிட்டு வராமல் மட்டும் போக மாட்டேன் நேரம் ஆனாலும் வந்து பேசிவிட்டு தான் சொல்வேன் சில பேரு வருகிறேன் என்று சொல்லிவிட்டு வராமல் போய்விடுகிறார்கள் அவர்களுக்கும் நான்கு பேர் விசில் அடிக்கத்தான் செய்கிறார்கள் என்ன செய்வது நாடு அப்படி இருக்கிறது . இந்த பிரதமரிடம் இல்லாத ஆகப்பெரிய சிறப்பு நரேந்திர மோடியிடம் உள்ளது . என்ன சிறப்பு என்றால் பொய் சொல்கின்ற பிரதமர் இதுவரையும் எந்த பிரதமரும் இப்படிப்பட்ட அப்பட்டமான பொய் சொன்ன வரலாறே கிடையாது 100 நாள் வேலை அனைவருக்கும் ஒருவேளை சோற்றுக்கு வழிவகை செய்தது அதில் மண்ணை அள்ளி மூடி போட்டு விட்டார் இந்த திட்டத்தின் பெயர் மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதியளிப்புச் சட்டம் அந்த பேரையே எடுத்து விட்டார்கள் பாவிகள் . ஐந்து மாதம் 15 நாளில் காந்தியை கொலை செய்த பாவிகள் காந்தியின் பெயரே இருக்கக் கூடாது என்று எடுத்து விட்டார்கள் . இது மிக முக்கியமான தேர்தல் டெல்லியா ? தமிழ்நாடா ? என்று சவால் விட்டிருக்கின்ற தேர்தல் இந்த தேர்தலில் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அணி கொள்கைக்காக இருக்கிற கூட்டணி மகத்தான வெற்றியை பெற வேண்டும் . அரை மணி நேரம் கூட வெயிலில் நிற்க முடியவில்லை ஒரு வேட்பாளருக்கு கேராவேணில் ஒளிந்து கொள்கிறார் .ஒரு நாள் பிரச்சாரத்திற்கு இரண்டு நாள் விடுமுறை நம்முடைய முதலமைச்சர் எப்பொழுதுமே வெயிலில் இருக்கிறார் வெயில் ஒத்துக்காத உனக்கு தேர்தல் எதற்கு வெயில் ஒத்துக் கொள்ளாத உனக்கு முதலமைச்சர் பதவிக்கு ஏன் ஆசைப்படுகிறாய் மக்களுக்கு நல்லது செய்வதற்காக ஆட்சி நடத்துகிற கட்சி நடத்துகிற திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரித்து நமது அன்பு சகோதரர் பூண்டி கலைவாணன் அவர்களை பல்லாயிரக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வது மட்டுமல்ல எதிர்த்து நிற்கின்ற அத்தனை பேரும் காப்புத் தொகையை இழப்பதற்கு கங்கணம் கட்டி வேலை பாருங்கள் என்றார்.
FILE NAME : TVR MANNARGUDI MUTHARASAN SPEECH 19.04.2026