குமாரபாளையம் அருகே உலக தினங்கள் ஒருங்கிணைந்த விழா

 

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகிலுள்ள கல்லாங்காட்டு வலசு பகுதியில், விடியல் ஆரம்பம் அறக்கட்டளை சார்பாக உலக தாய்மொழி தினம், உலக தண்ணீர் தினம், உலக காடுகள் தினம் மற்றும் சிட்டுக்குருவி தினம் ஆகியவை ஒருங்கிணைந்த விழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு சீனிவாசன் வரவேற்புரை வழங்கினார். காஞ்சான நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார். இதில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசுகளை விடியல் பிரகாஷ் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசப்பட்ட முக்கிய அம்சமாக, சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் நோக்கில் ஒவ்வொரு வீட்டிலும் சிறுதானியங்களும், தண்ணீரும் வைக்க வேண்டும் என குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகள் தங்கள் வீடுகளில் பறவைகளுக்கு தண்ணீர் வைப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

30 மேற்பட்ட இடங்களில் பறவைகளுக்கு தண்ணீர்,சிறுதானியம் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் சக்தி நாகப்பன், குணசேகர், சசி, தீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.











Previous Post Next Post