தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா தேவாரம் பகுதியில் உள்ள ஊர் பொதுகுளம் செட்டிகுளம் கண்மாய் பாராசூட் கல்பவிருக்ஷா அறக்கட்டளை மூலம் சீரமைக்கப்பட்டதற்கு செட்டிகுளம் கண்மாய் சங்க விவசாயிகள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
முன்னதாக ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர் குத்து விளக்கற்றி வைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து செட்டிகுளம் கண்மாய் பகுதியில் பனை விதை நடப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினராக தமிழரசி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கலந்து கொண்டார், மற்றும் பாராசூட் கல்பவிருக்க்ஷா ஷாஜிகுமார் மேலாளர் பங்கேற்று பேசினார்,
செட்டிகுளம் கண்மாய் இந்த கண்மாயானது நூற்றாண்டு காலமாக இந்தப் பகுதி மக்களின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காகவும் அவங்களது விவசாயத்திற்காகவும் பயன்பட்டு வருகிறது .
கடந்த 40 ஆண்டுகளாக இந்தப் பகுதியில் உள்ள செட்டி குளம் கண்மாயினை யாரும் தூர்வாரப்படாமலும் சீரமைக்கப்படாமல் இருந்ததால் இதனை கருத்தில் கொண்டு ஊர் பொதுகுளம் செட்டிகுளம் கண்மாய் பாராசூட் கல்பவிருக்ஷா அறக்கட்டளை மூலம் கடந்த மாதம் சீரமைக்கப்பட்டது.
என் நிகழ்வில் ஏராளமான விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் ......