திருச்சி பழைய பால்பண்ணை தொடங்கி துவாக்குடி வரை சர்வீஸ் சாலை அமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை கைலாஷ் நகர் கடை விதியில் தொடங்கியது
போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் தமிழரசன் திருவெறும்பூர் ஒன்றிய குழு உறுப்பினர்கள் சிவா நிவாஸ் ரஞ்சித் ஆகியோர் திருச்சி மாவட்டம் தமிழ்நாட்டில் மிக முக்கியமான மத்திய மாவட்டமாக இருந்து வருகிறது . தமிழ்நாட்டின் பன்முக எல்லைகளுக்கு செல்லும் போக்குவரத்து பெரும்பாலும் திருச்சியை கடந்து செல்ல வேண்டியதாக இருந்து வருகிறது. புதுக்கோட்டை, தஞ்சை பெரம்பலூர் மதுரை, சேலம், திண்டுக்கல், கரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களின் மாநில தேசிய சாலைகள் திருச்சியில் இணைகின்றன. இதில் திருச்சி தஞ்சையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 83ல், திருச்சி பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரையிலான 14.5கி.மீ சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்கப்படாமல், ஆயிரக்கணக்கான சாலை விபத்துக்கள் நடந்துள்ளது. நூற்றுக்கணக்கானவர்கள் விபத்தில் உயிரிழந்துள்ளனர். சாலையின் இருபுறமும். லட்சக்கணக்கான மக்கள் வருகின்றனர். BHEL, OFT, HABP, பொன்மலை ரயில்வே. தொழிற்சாலை, நூற்றுகணக்கான SIDCO தொழிற்சாலைகள், மேலும் NIT, SIT, UDC மற்றும் அரசு លក់ ល់कन, आक ITI, MONTFORT, TRICHY PUBLIC SCHOOL, LITTLE FLOWER SCHOOL, RSK, BHEL MATRIC, திருவெறும்பூர் ஒன்றிய அலுவலகம், துவாக்குடி நகராட்சி அலுவலகம், திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகம், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், துவாக்குடி, திருவெறும்பூர், பாய்லர், அறியமங்கலம் காவல் நிலையங்கள், துவாக்குடி அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள், 9 பெட்ரோல் பங்க்குகள், அரசு அலுவலகங்கள், திருவெறும்பூர் ரயில் நிலையம், அது போல் 25 ற்கும் மேற்பட்ட அரசு தனியார் வங்கிகள், 3 திரையரங்குகள், பல நூறு உணவங்கள், சிற்றுண்டி மற்றும் LISU வணிக நிறுவனங்கள் சூப்பர் மார்கெட்டுகள், பல்வேறு அமைந்திருக்கிறது. தற்போது திருவெறும்பூருக்கு புதிய பேருந்து நிலையம் அமைக்க அரசு அடிக்கல் நாட்டியிருக்கிறது.
மாணவர்கள் இளைஞர்கள் தொழிலாளர்கள் என வாழ்க்கை தேவைக்காக இந்த தேசிய நெடுஞ்சாலையை அன்றாடம் பயன்படுத்த வேண்டியதாக இருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் இச்சாலைக்கான சர்வீஸ் சாலை அமைக்கப்படாமல், போக்குவரத்து நெரிசலை முறைப்படுத்த இயலாமலேயே பல நூறு உயிரிழப்புகளும், பல ஆயிர ஊனமும் ஏற்பட்டுருக்கிறது. பல குடும்பங்கள், குடும்பத்தின் ஆதாரமானவர்களை இழந்து நிர்கதியாய் நிற்கிறார்கள்.
பல ஆண்டுகளாக சர்வீஸ் சாலை அமைப்பதற்காக அப்பகுதி மக்களும் சர்வீஸ் சாலை மீட்பு கூட்டமைப்பும், அனைத்து அரசியல் கட்சிகளும் தொடர்ந்து போராடி வருகின்றனர். கடந்த 2023 இறுதியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திருச்சி மாவட்ட அமைச்சர்கள் மாண்பு மிகு.K.N.நேரு அவர்களும் மாண்பு மிகு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களும், கோரிக்கை சாலையின் இருபுறமும் வசிக்கும் மக்களின் ஊர் சங்க பிரதிநிதிகளை அழைத்து நடத்திய ஆலோசனை கூட்டத்தில், சர்வீஸ் சாலை அமைப்பதற்கான நிதி அதிகம் தேவை. அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடும். ஒன்றிய அரசோடும் பேசி விரைவில் அமைப்போம் என்று உறுதியளித்தார்கள்.
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு.துரை வைகோ அவர்கள் சர்வீஸ் சாலை அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களின் தலைமையில் சர்வீஸ்சாலை மீட்பு கூட்டமைப்பு நிர்வாகிகள், CPI புறநகர் மாவட்டச் செயலாளர், விசிக மாவட்டச் செயலாளர், மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்கள் முன்னிலையில் தமிழ்நாட்டு முதல்வரின் முதன்மைச் செயலாளர் இடத்தில், கோரிக்கையை விளக்கி சர்வீஸ் சாலை வேண்டும் என்று தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.
ஆனால் சர்வீஸ் சாலைக்கு கையகப்படுத்தப்பட வேண்டிய இடங்களில், புதிய கட்டடங்கள் வணிக நிறுவனங்கள் எழுப்பப்பட்டு வருவது கேள்வியை எழுப்பிவருகிறது. மேலும் 45 மீட்டர் அகல சாலை அமைத்திடல் வேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகும் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல், சர்வீஸ் சாலைப்பணி கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. ஆகவே சர்விஸ் சாலைக்கான நிலத்தை கையகப்படுத்தி, விரைவில் சர்வீஸ் சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
இப் போராட்டத்தை வாழ்த்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் பத்மாவதி தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணை செயலாளர் இந்திரஜித் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புறநகர் மாவட்ட துணைச் செயலாளர்கள் பழனிச்சாமி அண்ணாதுரை மாவட்ட பொருளாளர் ஜனசக்தி உசேன் இஸ்கப் மாநில குழு உறுப்பினர் வெள்ளத்துரை மற்றும் சர்வீஸ் சாலை அமைப்பு போராட்ட குழு அணைத்து கட்சி நிர்வாகிகள் ஆகியோர் போராட்டம் வெற்றி அடைய வலியுறுத்தி பேசினார்கள்