நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காந்திபுரம் பகுதியில் நேர்மை,சத்தியம்,ஒழுக்கம், எனும் கொள்கை பிடிப்போடு வாழ்ந்த ஓமந்தூர் இராமசாமி முதல் தமிழக முதல்வர், சுதந்திர போராட்ட தியாகி முதல் சுதந்திர தேசிய கொடியை ஏற்றிய பெருமை பெற்ற அவருடைய பிறந்த நாளில் மலர்மாலை அணிவித்து விடியல் ஆரம்பம் சார்பில் விழா கொண்டாடப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காந்திபுரம் பகுதியில் நேர்மை,சத்தியம்,ஒழுக்கம், எனும் கொள்கை பிடிப்போடு வாழ்ந்த 
ஓமந்தூர் இராமசாமி  
முதல் தமிழக முதல்வர், சுதந்திர போராட்ட தியாகி முதல் சுதந்திர தேசிய கொடியை ஏற்றிய பெருமை பெற்ற அவருடைய பிறந்த நாளில் மலர்மாலை அணிவித்து 
விடியல் ஆரம்பம் சார்பில் விழா கொண்டாடப்பட்டது.
இனிய விழாவில் மாணவ மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  விடியல் பிரகாஷ் பரிசு புத்தகம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

சமூக சேவகர் பூங்கோடி ஓமந்தூர் இராமசாமி அவர்கள் வாழ்க்கை வரலாற்றை மாணவ மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

சுற்றுச்சூழலை பாதிக்கும் நெகிழி ஒழிப்போம் மஞ்சப்பை பயன்படுத்துவோம் என மாணவ மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.

மேலும் உதவிகரம் அங்கப்பன் நன்றியுரை கூறினார்.

இனிய விழாவில் ஆல்வின் சுமதி, ராஜவடிவேல், ஆகியோர் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post