கீழ்விஷாரத்தில் பத்திரிகையாளரை தாக்கி – செல்போன் உடைப்பு, கொலை மிரட்டல்!



கல்லூரி வளாகத்தில் நடந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் பகுதியில் செயல்பட்டு வரும் எம்.எம்.இ.எஸ். ஹக்கீம் மகளிர் கல்லூரியில், இன்று(31.01.26) கல்லூரி மாணவிகளுக்கு மடிக்கணினி (டேப்லெட்) வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர். காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் மாவட்ட ஆட்சியரும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இந்நிலையில், நிகழ்ச்சியை செய்தியாக சேகரிக்க சென்ற “எக்ஸ்பிரஸ் பதிப்பு” என்ற தினசரி நாளிதழின் மாவட்ட செய்தியாளர் பாரூக் பாஷா கல்லூரிக்கு வந்தபோது, கல்லூரி நுழைவாயில் அருகே நின்றிருந்த கீழ்விஷாரம் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம் என்பவரின் மகனும் 8வது வார்டு நகர மன்ற உறுப்பினருமான கோபி என்பவர் ஒப்பந்த வேலைகளில் கூட்டணி வைத்து செயல்பட்டு வரும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும் ரவுடியுமான ஒப்பந்ததாரர் எஸ்.ஆர்.&கோ நிறுவனத்தைச் சேர்ந்த செந்தில் ராஜ்குமார் ஆகிய இருவரும் சேர்ந்து, பத்திரிகையாளரிடம் தகராறு செய்துள்ளனர்
அப்போது அவர்கள் பேசும்போது
“நாங்கள் போட்ட தெருசாலைகள் சரியில்லை என்று பத்திரிகையில் செய்தி வெளியிடுவாயா?” என ஒருமையில் பேசியும், தகாத வார்த்தைகளை பயன்படுத்தியும் பாரூக் பாஷாவை கீழே தள்ளியதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அவரிடமிருந்த சுமார் 50,000 ரூபாய் மதிப்புள்ள செல்போனை பிடுங்கி தரையில் அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்

இதோடு மட்டுமின்றி,
“இப்படிப்பட்ட செய்திகளை வெளியிட்டால் உன்னை கூண்டோடு அழித்துவிடுவேன்… உன் குடும்பத்தில் யாரும் மிச்சம் இருக்க மாட்டார்கள்” என கூறி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்த சம்பவம் கல்லூரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Previous Post Next Post