போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த கல்வியாளர் நெல்லை நாடார் துணை முதல்வர் மு. திருப்பதி வெற்றி பெற்ற மாணவர்கள் பரிசுகளை வழங்கினார்
சென்னை புது பெருங்குளத்தூரில் உள்ள ஆல்பா ஜெனோ பள்ளி முதல்வர் நாகஅபிநயா, முன்னிலை வகித்தார். தலைமை மற்றும் சிறப்பு விருந்தினராக சமூக சேவகர், கல்வியாளர், திருப்பதி, கல்லூரி துணை முதல்வர், நெல்லை நாடார் பொறியியல் கல்லூரி பெருங்களத்தூர், சென்னை, பரமேஸ்வரன் திட்ட ஒருங்கிணைப்பாளர் எம்ஐடி, அண்ணா பல்கலைக்கழகம், குரோம்பேட்டை, சென்னை கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
கல்வியாளர் மு. திருப்பதி அவர்கள் மாணவர்களிடத்தில் பேசும்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் செல்போன் அதிகமாக பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். படிப்பில் கவனம் செலுத்தப்படுவது குறைகிறது மற்றும் பல்வேறு பிரச்சனைகளை மாணவர்களை எதிர்கொள்கிறார்கள். மாணவர்கள் படிப்பிலும் விளையாட்டுப் போட்டிகளும் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர்கள் மாணவர்களை கண்காணிக்க வேண்டும். மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவது மது போதையை விட கொடிய நோய் என்று பேசினார் . விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தார். உடன் பள்ளி ஆசிரியர்களும், பெற்றோர்களும், மாணவர்களும் ஆர்வமுடன் திரளாக கலந்து கொண்டனர்.