மறைந்த தேமுதிக நிறுவனரும், முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த்-ன் 2ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து கட்சி மற்றும் உலகம் முழுவதும் அவரது ரசிகர்களால் அனுசரிக்கப்பட்டு வருகிறது.,
இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு, தேமுதிக உசிலம்பட்டி தொகுதி பொறுப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான தேமுதிக நிர்வாகிகள் கேப்டன் விஜயகாந்த்-ன் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து, மௌன அஞ்சலி செலுத்தினர்.,
அங்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கேப்டன் செய்த சாதனைகளை கேட்டறிந்ததுடன் அவர்களும் அவரது திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.,
இதே போன்று பேரையூர் ரோட்டில் வி.பெருமாள்பட்டி ஊமை விழிகள் நற்பணி மன்றம் சார்பில் இரண்டாம் ஆண்டு நினைவு தின அனுசரிப்பில் சிலம்ப மாணவ மாணவிகள் சிலம்பம் சுற்றியவாறு ஊர்வலமாக வந்து கேப்டன் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.,