ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில்
பிலீவ் ஃபேஷன் இன்ஸ்டிட்யூட் பெருமையுடன் வழங்கிய “வேலோரா ஃபேஷன் ஷோ 2025–26” நிகழ்ச்சி, நேற்று வலாஜப்பேட்டை ஏ.ஏ.ஏ. கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கான ஆடை கண்காட்சி, மாணவிகளின் வடிவமைப்பாளர் ஆடைத் தொகுப்புகள், சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கும் விழா உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்று, பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன.
இந்நிகழ்ச்சி, சுந்தரி தலைமையில் இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்ற 30 மாணவிகளின் திறமைகளை வெளிப்படுத்தும் மேடையாக அமைந்தது. முதல் ஆடை அணிவகுப்பு வாலாஜாவில் நடைபெற்ற நிலையில், அதில் 20 பேர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃப்ராக் வடிவமைப்பு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்கள்:
முதல் பரிசு – சுகாசினி
இரண்டாம் பரிசு – நிவேதா
மூன்றாம் பரிசு – வனிதா
நான்காம் பரிசு – ஜெயலட்சுமி ஆகியோருக்கு கிடைத்தது
அதேபோல், பிளவுஸ் வேலைப்பாடு போட்டியில்:
முதல் பரிசு – சுமித்ரா
இரண்டாம் பரிசு – ரேவதி
மூன்றாம் பரிசு – நிவேதா
நான்காம் பரிசு – பிரபா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்
இந்த ஆடை அணிவகுப்பில் சிறப்பு விருந்தினர்களாக தொழிலதிபர் அக்பர் ஷெரீப், கே.எச். நிறுவனத்தின் துணைத் தலைவர் சந்திரசேகர், துணைத் தலைவர் கனகராஜா, சுரேஷ், பிரேம் ஆகியோர் கலந்து கொண்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் கேடயங்களை வழங்கி கௌரவித்தனர்.
போட்டியின் நடுவர்களாக சென்னை அழகி 2025 – அகல்யா மற்றும் ஆடை வடிவமைப்பாளர் தனம் லோகநாதன் ஆகியோர் பங்கேற்று, போட்டியாளர்களைத் தேர்வு செய்து பரிசளிப்பில் முக்கிய பங்காற்றினர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தைப் பொருத்தவரை,
இந்த ஆடை அணிவகுப்பு மாவட்ட வரலாற்றில் முதல் முறையாக நடைபெற்ற ஃபேஷன் ஷோவாக பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.