கொமாரபாளையம் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பாக 58-வது தேசிய நூலக வார விழா நடைபெற்றது.

 

விழாவில் நூலக வாசகர் J. சண்முகசுந்தரம் அனைவரையும் வரவேற்றார்.

































































































































































































































                                                                                                                                                                                   



                                                                                                                                                          தலைமை கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் விடியல் பிரகாஷ்

நிகழ்வில்  மாணவ மாணவிகள், சிறுகதை போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி மற்றும் ஓவிய போட்டியில் கலந்து கொண்டனர்.

மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பள்ளி மாணவி மாணவிகளுக்கு 

விடியல் ஆரம்பம் பவுண்டேஷன் சார்பாக பாராட்டு சான்றிதழ் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டது.

மாணவ மாணவிகள் எவ்வாறு எழுத வேண்டும் எவ்வாறு பேச வேண்டும் என்பது குறித்து எழுத்தாளர் கேசவமூர்த்தி ராஜகோபால், பன்னீர்செல்வம்,ஆனந்தன்,சண்முகம்,விவேக், ஆகியோர் விளக்கம் அளித்தார்கள்.

வாசக வட்ட தலைவர் விடியல் பிரகாஷ் குறிப்பிடகையில் மாதந்தோறும் நான்காவது ஞாயிற்றுக்கிழமை மாலை வாசிப்பு திருவிழா தொடர்ந்து நடைபெறுகிறது. அனைத்து மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு தங்கள் வாசிப்பை அதிக படுத்த வேண்டும்  என்று கூறினார்.

நிறைவாக மாரியாயி கிளை நூலகர் நன்றி உரையாற்றினார்.

கதிரவன்,லெனின், தீனா,ஜமுனா, மற்றும்  ஆசிரியர்கள். பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


Previous Post Next Post