இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர், மாவட்ட கழக செயலாளர், ஆர்.காந்தி அவர்கள், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாம் நடைபெற்று வருவதை நேரில் ஆய்வு செய்தார்.
அதனடிப்படையில் நெமிலி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஆட்டுப்பாக்கம் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி எண் : 213ல் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வாக்குச்சாவடி அலுவலர்களிடம் வாக்காளர் பட்டியலில் தகுதியான வாக்காளர் ஒருவர் கூட விடுபடாமல் இருக்க உரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
அப்போது நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர், நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு, மாவட்ட பிரதிநிதி அரிகிருஷ்ணன், கிளை செயலாளர்கள் கருணாநிதி, திருநீலகண்டன், மாணிக்கம், சம்பந்தன், பெருமாள், ஒன்றிய குழு உறுப்பினர் சரஸ்வதி பார்த்திபன், வாக்குச்சாவடி முகவர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.