திண்டிவனத்தில் பசுமை பாரத மக்கள் கட்சி சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா.

திண்டிவனத்தில் பசுமை பாரத மக்கள் கட்சி சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா.

திண்டிவனம், செப்.18
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காமாட்சி அம்மன் கோவிலில் அகில பாரத விஷ்வகர்மா அமைப்பு சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பசுமை பாரத மக்கள் கட்சியின் இணை பொது செயலாளர் ஏழுமலை கலந்து கொண்டு சிறப்பித்தார்.மேலும் கோவிலில் வருகை தந்த பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர் இதில் அகில பாரத விஸ்வகர்மா அமைப்பைச் சேர்ந்த ஜனார்த்தனன், சீனிவாசன், ரவி ,ராஜா, ஆறுமுகம் ,துரைராஜ் ,குமார், ராமச்சந்திரன், மற்றும் திண்டிவனம் நகர பொன் வெள்ளி தொழிலாளர் நல சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post