தேவீரஅள்ளி முருகன் ஆலயத்தில் சமுதாயம் கூடம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் தேவீரஅள்ளி ஶ்ரீ நடுபழனி தண்டாயுதபாணி ஆலயத்தில் நாடாளுமன்ற ராஜ சபா உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூபாய் 15 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாயம் கூடம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் அதிமுக நாடாளுமன்ற ராஜசபா உறுப்பினர் தம்பிதுரை கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன், ஜெயபால், மாவட்ட எம்ஜிஆர் மன்ற அவைத் தலைவர் ரவிசந்திரன்,
ஒன்றிய அவை தலைவர் வடிவேலன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் வெற்றிச்செல்வன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கார்த்திகேயன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் பழனிசாமி, பழனி,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் முருகேசன், சிவலிங்கம், கோவில் பரம்பரை நிர்வாக தர்மகர்த்தா சக்கரவர்த்தி உள்ளிட்ட
500 க்கும் மேற்ப்பட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மாற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்