தமிழக கோகோ அணி வீராங்கனைகளுக்கு விளையாட்டுக்கான சீருடைகளை வழங்கினார் தேனி எம்.பி ப.ரவீந்திரநாத்

தமிழக கோகோ அணி வீராங்கனைகளுக்கு விளையாட்டுக்கான சீருடைகளை வழங்கினார்  தேனி எம்.பி ப.ரவீந்திரநாத் 

தேனி மாவட்டம் பெரியகுளம் தெற்கு அக்ரஹாரம்  பகுதியில் உள்ள தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் அவர்களை  அவரது இல்லத்தில்  மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த வாரம்  நடைபெறும் அகில இந்திய அளவிலான கோகோ விளையாட்டு போட்டியில் பங்குபெறும் தமிழக கோகோ அணி வீராங்கனைகள் மற்றும் நிர்வாகிகள்  நேரில் சந்தித்தனர். உடன் தமிழ்நாடு மாநில கோகோ கழக சேர்மன் டாக்டர் .முத்துகுகன் ,தமிழ்நாடு நடுவர்கள் குழுத் தலைவர் இரா.விமலேஸ்வரன் ,அணி மேலாளர் பயிற்சியாளர்கள் உடன் இருந்தனர்.தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் அவர்கள் அகில இந்திய அளவிலான கோகோ விளையாட்டுப் போட்டியில் பங்குபெறும் தமிழக கோகோ அணி வீராங்கனைகளுக்கு வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்து விளையாட்டுக்கான சீருடைகளை வழங்கினார்
Previous Post Next Post