பெரியகுளம் விக்டோரியா நினைவு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட் திருவிழா தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது
தேனி மாவட்டம் பெரியகுளம் விக்டோரியா நினைவு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் திராவிட முன்னேற்றக் கழக மாநில இளைஞரணி செயலாளரும் ,சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 45 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று கிரிக்கெட் திருவிழா தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது .இந்த நிகழ்ச்சிக்கு திமுக தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் ,பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் தலைமையில் பெரியகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் எல்.எம். பாண்டியன் ,பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தங்கவேல்,பெரியகுளம் நகரச் செயலாளர் முகமது இலியாஸ், நகரத் துணைச் செயலாளர் சேதுராமன் ,நகர் மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார், ஆகியோர் முன்னிலையில் கிரிக்கெட் திருவிழா தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது .இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை திமுக இளைஞரணி நிர்வாகி திராவிடன் ,ராம்ஜி ,தினேஷ் குமரன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர் . இந்த கிரிக்கெட் திருவிழா நிகழ்ச்சி 6 நாட்கள் நடைபெறும் இதில் வெற்றி பெற்ற அணியினருக்கு முதல் பரிசு 50,000 , இரண்டாம் பரிசு 20000 வழங்கபட உள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்து உள்ளனர்.