பாதாள சாக்கடை அடைப்புகளை அகற்ற தானியங்கி கருவி கண்டுபிடிப்பு – ரோவர் பள்ளி மாணவர்களின் சமூக அக்கறை மிக்க முயற்சிக்கு பாராட்டுகள்!

தேதி: 26.11.2026


வேலூர்: வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சியில், பெரம்பலூர் தந்தை ரோவர் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் எஸ். சபரீஷ் மற்றும் ஆ. பரணிராஜ் ஆகியோர் பாதாள சாக்கடை, ஏரி மற்றும் கழிவுநீர் கால்வாய்களில் தேங்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றும் தானியங்கி கருவியை உருவாக்கிக் காட்சிப்படுத்தினர்.

மனிதர்கள் ஆபத்தான முறையில் சாக்கடைகளில் இறங்கி குப்பைகளை அகற்றும் நிலையைத் தவிர்த்து, தூய்மைப் பணிகளை எளிதாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்தக் கருவி மிகவும் சிறப்பானதும், சமூக நலன் சார்ந்ததுமான கண்டுபிடிப்பாகும்.

இந்த முயற்சியைப் பார்வையிட்ட வேலூர் மாவட்ட ஆட்சியர் பி.எஸ். லீலா அலெக்ஸ் மாணவர்களைப் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொதுமக்கள் சுகாதாரம் மற்றும் தூய்மைப் பணிகளுக்கு உதவும் வகையில் அமைந்துள்ள மாணவர்களின் இந்தப் புதுமையான முயற்சி உண்மையிலேயே வரவேற்கத்தக்கது. இதுபோன்ற கண்டுபிடிப்புகள் நடைமுறைப் பயன்பாட்டிற்கு வந்தால் சமூகத்திற்கு பெரும் பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை.

A. சரவணன்,
வேலூர் மாவட்ட செய்தியாளர்.
Previous Post Next Post