கள்ளக்குறிச்சி. ஆட்சியர் விவகாரம்: சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்! எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!


தவெக எம்.எல்.ஏ.வை இன்றே கைது செய்ய வேண்டும் – தமிழக அரசுக்கு கோரிக்கை!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஜெ.இ. பத்மஜாவுக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள புகார் விவகாரத்தில், தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு மீதான நம்பிக்கை இல்லை என்றும், எனவே வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், ஒரு மாவட்ட ஆட்சியருக்கே பணியிடத்தில் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்த விவகாரத்தை மறைக்க எத்தனை பொய்கள், எவ்வளவு உருட்டுகள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ஆட்சியருக்கு எதிராக இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் அநீதிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ. மற்றும் இந்த விவகாரத்தை மறைக்க முயன்றதாகக் கூறப்படுவோர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரம் தமிழக அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

A. சரவணன்,
வேலூர் மாவட்ட செய்தியாளர்.
Previous Post Next Post