நவம்பர் 15, 2026:
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அம்பேத்கர் சிலை அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்தில் கடந்த நவம்பர் 1-ஆம் தேதி நள்ளிரவு முகமூடி அணிந்து புகுந்த மூன்று பேர், கண்காணிப்பு கேமராவில் ஸ்பிரே அடித்து, கூர்மையான ஆயுதங்களால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த குடியாத்தம் போலீசார், பெரும்பாடி பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (20) மற்றும் இரண்டு சிறார்களை கைது செய்தனர்.
யூடியூப் வீடியோக்களைப் பார்த்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
A. சரவணன்.
வேலூர் மாவட்ட செய்தியாளர்