உசிலம்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் செல்லும் சாலை அமைக்கப்படாமல் மழைநீர் தேங்கி குண்டும் குழியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்- விளையாட்டு மைதானத்தில் மழைநீர் வெளியே செல்ல முடியால்குளம் போல் தேங்கி கடல்போல் காட்சியளிக்கிறது- மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை

உசிலம்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் செல்லும் சாலை அமைக்கப்படாமல் மழைநீர் தேங்கி குண்டும் குழியுமாக  காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள்  மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்- விளையாட்டு மைதானத்தில் மழைநீர் வெளியே செல்ல முடியால்குளம் போல் தேங்கி கடல்போல் காட்சியளிக்கிறது- மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது

கடந்த இரண்டு தினங்களாக வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள சூழலில்  தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது.,

 இந்த நிலையில் உசிலம்பட்டி நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 67 மில்லி மீட்டர் மழைப்பதிவாகியுள்ளது.,

இந்த நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி  அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் பள்ளியின் விளையாட்டு மைதானம் சொல்லும் வில்லாணி சாலை மழைநீர் தேங்கி  குண்டும் குழியுமாக  காணப்படுகிறது.,

மேலும் இந்த வழியாக செல்லும் குடியிருப்பு வாசிகள்,பத்திரப்பதிவு அலுவலகம் சொல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள்  மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.,

மேலும் அரசு மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டு மைதானத்திற்கு  மழைநீர் குளம் போல் தேங்கி கடல் போல் காட்சியளிக்கிறது.,

இதனால் விளையாட்டு பயிற்சியில் ஈடுபடுவோர் மற்றும் உடற்பயிற்சி ஈடுபடுவோர் விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்த முடியாமல் தண்ணீரில் மூழ்கியுள்ளது.,

மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து மழை நீரை அகற்றி பயன்பாட்டுக் கொண்டு வர வேண்டும் மேலும் குண்டும் குழியுமாக உள்ள சாலையை அமைத்து தர வேண்டும் என  கோரிக்கை எழுந்துள்ளது.,
Previous Post Next Post