சின்னமனூர்அருகே சீலையம்பட்டியில் டிராக்டர் மோதி சம்பவ இடத்திலேயே பெண் பலி உறவினர்கள் சாலை மறியல்

தேனிமாவட்டம் சின்னமனூர் அருகே  சீலையம்பட்டி பகுதியில்  பெண் உட்பட 3 பேர் நின்று கொண்டிருந்த நிலையில் டிராக்டரின் டயர் வெடித்ததால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் அவர்கள் மீது மோதியது.

இந்த கோர விபத்தில், கோவில்பட்டி பகுதியை சேர்ந்த சமுகராஜ் மனைவி சுதா 39 என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

விபத்தைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் சம்பவ இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு,பொதுமக்களுடன்பேச்சுவார்த்தை நடத்தி உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,   

உறவினர்கள் சின்னமனூர் அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லாமல் க.விலக்கு கொண்டு சென்றதை அடுத்து தொடர்ந்து மறியலில் ஈடுபட்டு வருகின்றனர் ......
Previous Post Next Post