மயிலாடுதுறை மாவட்டம் சாத்தான்குடி கிராமத்தில் நடைபெற்ற சாதி ஆணவ படுகொலையை கண்டித்து திருவாரூர் மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.


ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான தனிச் சட்டத்தினை உடனடியாக ஏற்ற வலியுறுத்தியும், சாதி ஆணவ படுகொலையின் ஈடுபட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் தமிழ்மணி தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், கட்சியின் மாவட்ட செயலாளர் டி.முருகையன், கண்டன உரை நிகழ்த்தினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேகர், கந்தசாமி, கோமதி, ரகுராமன் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி கண்ணன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Previous Post Next Post