போச்சம்பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர் கிருஷ்ணகிரி ‘சிங்கப்பெண்’ காவல் உதவி ஆய்வாளர் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்

போச்சம்பள்ளி: ஜூலை.5

கிருஷ்ணகிரி மாவட் டம், போச்சம்பள்ளி அருகே உள்ள பர்கூர் உட்கோட்டம், நாகரசம் பட்டி காவல் சரகத்திற்கு உட்பட்ட போச்சம்பள்ளியில் இன்று பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
போச்சம்பள்ளி பேருந்து நிலையம் காவல் நிலையம் ஆகிய இடங்களில் நடைபெற்ற இந்த முகாமிற்கு, கிருஷ்ணகிரி மாவட்ட “சிங்கப் பெண்” காவல் உதவி ஆய்வாளர் சங்கீதா தலைமை தாங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அவரது தலைமையிலான போலீஸ் குழுவினர் அங்குள்ள பெண்களிடம் தற்காலச் சூழலில் தேவையான பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.

குறிப்பாக, பள்ளி மற்றும் பொது இடங் களில் குழந்தைகளுக்கு ஏதேனும் அச்சுறுத்தலோ அல்லது பாதிப்போ 
ஏற்பட்டால், சற்றும் தாமதிக்காமல் உடனடி யாக 1091 என்ற இலவச உதவி எண்ணிற்குத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும், போதைப் பொருட்களின் தீமைகள் மற்றும் அதிலிருந்து பெண்கள் மற்றும் மாணவர்கள் எவ்வாறு தங்களைப் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் போச்சம்பள்ளி காவல் உதவி ஆய்வாளர் மும்தாஜ் , பழனியம்மாள் மற்றும் உளவுப் பிரிவு சி.ஐ.டி (CID) ஆனந்த், பெண்கள் பல கலந்து கொண்டனர். காவல்துறையின் இந்த அதிரடி விழிப்புணர்வு முயற்சி, சிங்கப் பெண் படையினால் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Previous Post Next Post