திருவாரூரில் ஆன்மீகம் ஆனந்தம் அனைத்தும் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்ததாவது... ஹைட்ரோ கார்பன் திட்டம் கூடாது என்பதிலே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உறுதியாக இருக்கிறது. மேகதாது அணைகட்ட அனுமதிக்க கூடாது. விவசாயிகளுக்கு இந்த மண்டலம் பாலைவனமாகிவிடும். எனவே இரு மாநிலங்களுடைய உறவு பிரச்சனை மட்டுமல்ல உயிர் பிரச்சனையும் கூட என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி குறிப்பிட விரும்புகிறது. தமிழக அரசு விவசாயிகளுடைய எண்ணங்களுக்கு 100% பூர்த்தி செய்யக்கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.விவசாய கடன் முற்றிலும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது விவசாயிகளுடைய எண்ணம் மட்டுமல்ல, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி கொண்டிருக்கிறோம். தண்ணீரும் ஜூன் 12 ஆம் தேதி திறந்துவிடாத சூழலிலே விவசாயிகள் கஷ்டத்திலும் நஷ்டத்திலும் இருக்கிறார்கள். விவசாயினுடைய குறைகளை 100% தீர்க்க வேண்டியது அரசனுடைய கடமை. குழந்தைகள் பெண்கள் தொடர்பான பாலியல் தொல்லை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதை முடிவுக்கு கொண்டு வர வேண்டியது அரசாங்கத்தினுடைய கடமை. சமீப நாட்களாக குழந்தைகளை வெளியிலே விடுவதற்கு கூட பெற்றோர்கள் அச்சப்படக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்த அச்சத்திற்கும் பயத்திற்கும் காரணம் கஞ்சா போதை பொருள்கள். சென்னையில் மட்டும் 24 மணி நேரத்திலே 12 குற்றங்கள் நடைபெற்றதாக எதிர்கட்சி என்ற முறையிலே அரசை குறை கூற விரும்பவில்லை. தப்புக்கள் நடந்து கொண்டிருக்கிறது என்று தொலைக்காட்சியும் பத்திரிக்கையும் கூறுகின்றது. நான் கூற விரும்புகிறேன். மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அரசாங்கத்தினுடைய கடமை. இது போன்ற தவறான செயல்களுக்கு இரும்புக்கரம் கொண்டு அடக்கக்கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டும். அரசு முதல் உரிமையாக இதிலே தனி கவனம் செலுத்தி இதற்கு முற்றுப்புளி வைப்பதற்கான உயர்ந்த நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பிலே கேட்டுக்கொள்கிறேன். தவறு செய்பவர்களை நேரடியாக பார்த்தால் சுட்டு கொள்ள வேண்டும். அவர்கள் உயிரோடு இருக்க கூடாது. அதில் மாற்று கருத்தே இருக்க கூடாது. அவர்களுக்கு யாரும் வாதாடக்கூடாது. மிருகத்தனமான செயலிலே ஈடுபடும் போது வேறு வழி இல்லை. மூன்று வயது பச்சிளம் குழந்தை நினைத்து பார்க்க கூட முடியவில்லை இரவிலே தூக்கம் வருவது கிடையாது. இது போன்ற நிலை இருக்கவே கூடாது. இந்த நிலைக்கு காரணம் தனிமனித ஒழுக்கம்தான். தனிமனித ஒழுக்கம் கெடுவதற்கு காரணம் போதை பொருள் மற்றும் குடி. இதற்கு முற்று புள்ளி வைக்க வேண்டிய அரசாங்கத்தினுடைய கடமை. தயவு கூர்ந்து இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன். இதனை முதல்படியாக எடுத்துக்கொண்டு இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேண்டி கேட்டுக்கொள்கிறோம். 140 கோடி மக்கள் தொகை கொட இந்தியா மிகப்பெரிய ஜனநாயகம் கோவிட் காலத்திலே படிப்படியாக சங்கடங்களை தாங்கி உயர்ந்து சிறந்து வளர்ந்து வந்திருக்கிறது என்பதிலே மாற்று கருத்து எடுக்க முடியாது. நம்முடைய அண்டை நாடுகளில பார்த்தா நமக்கு கம்பேர் பண்ற 10% 20% தான் மக்கள் தொகை. அவர்கள் படும் கஷ்டம் இன்னும் வெளியே வர முடியவில்லை. கடன் தொல்லை பொருட்கள் வாங்கக்கூடிய தொல்லை இவர்களுக்கெல்லாம் இந்தியா உதவி செய்து கொண்டிருக்கிறது இது மாற்று கருத்து இருக்க முடியாது. நீங்க கோவிட் காலத்தை கம்பேர் பண்ணா இந்த ஆறு வருட காலத்திலே படிப்படியாக பொருளாதார ரீதியாக நாம் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறோம் மாற்று கருத்து கிடையாது. மேலும் உயர வேண்டும் சிறக்க வேண்டும் வளர வேண்டும். இந்த போர்ல்லாம் இருக்கு பாருங்க இதன் அடிப்படையிலே பல சங்கடங்கள் பல தொந்தரவுகள். இதை தாண்டி மத்திய அரசு பொருளாதார நிலையை உயர்த்த வேண்டும். பெட்ரோல் டீசல் விலை எல்லாம் குறைக்கக்கூடிய உயர்த்த நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எங்களுடைய வேண்டுகோள். இந்தியா மிகப்பெரிய ஜனநாயகம். இந்த ஜனநாயகத்தில தனி மனிதர்களுக்கு நிறைய சுதந்திரம் இருக்கிறது. இந்த கட்சியில இருந்து அந்த கட்சிக்கு போகலாம் அந்த கட்சியிலிருந்து இந்த கட்சிக்கு போகலாம். தேர்தலுக்கு பின்பு ஒரு கட்சியில் இருந்து எதிர்த்து வேலை செய்யலாம். தேர்தலுக்கு பிறகு ஆட்சியாளர்கள் இருக்கின்ற இடத்திற்கு போய் அவர்களோடு இணைந்து கொள்ளலாம். அதனால இதெல்லாம் ஜனநாயகத்தினுடைய மண் ஜனநாயகத்தினுடைய மாண்பு இதை தினம்தோறும் எல்லா கட்சிகளும் சந்தித்து கொண்டிருக்கிறது பார்த்து கொண்டிருக்கிறோம். மத்திய மாநில அரசுகள் என்று தனிப்பட்ட முறையிலே குறையல்லாம் சொல்ல நான் விரும்பவில்லை. இப்ப போர் சூழல் பல பிரச்சனைகள் இதெல்லாம் இப்ப முடிவுக்கு வரக்கூடிய நல்ல நிலை ஏற்படும் என்று நம்புகிறேன். உலகளவிலே இது எல்லோருக்கும் தேவை எல்லா நாடுகளுக்கும். இந்தியாவும் அந்த வகை பொருளாதார ரீதியாக உயர வேண்டும். பொருட்களுடைய விலை குறைய வேண்டும் மக்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என நாம் வேண்டிக்கொள்ள வேண்டும் என்றார்.
தவறு செய்பவர்களை நேரடியாக பார்த்தால் சுட்டுக் கொள்ள வேண்டும் - திருவாரூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி கே வாசன் பேட்டி...
தமிழர் களம் மாத இதழ்
0