தமிழக முதலமைச்சர் ச .ஜோசப் 52 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தமிழக வெற்றி கழகம் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகின்றது இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள உள்ளிக்கோட்டையில் தமிழக முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு உள்ளிக்கோட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளியில் பயின்று வரும் சுமார் 1200 மாணவ மாணவியர்களுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நோட் , பேனா , பென்சில் , தேர்வு அட்டை உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சி மருத்துவர் அணியின் மருத்துவர் சந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் , ஆசிரியர்கள் மற்றும் தமிழக வெற்றிக்கழக மாவட்ட, ஒன்றிய , நகர கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது
தமிழர் களம் மாத இதழ்
0