திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கினைப்பு குழுத்தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது காவிரி நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படையில் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு 2018 முதல் காவிரிமேலாண்மை ஆணையம் தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக உச்ச நீதிமன்றத்தின் நேரடி கட்டுப்பாட்டில் அமைக்கப்பட்டுள்ளது.கர்நாடகம் தமிழ்நாடு உள்ளிட்ட அணையில் மற்றும் ஆறுகளில் வரக்கூடிய நீர் நிர்வாகம் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளை காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது முதல் 15 ஆண்டுகளுக்கு எந்த ஒரு மாற்றத்தையும் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு கூறப்பட்டதை மாற்ற இயலாது என உச்சநீதிமன்ற வழக்குகளை தள்ளுபடி செய்திருக்கிறது. இந்நிலையில் கர்நாடக முதலமைச்சராக பசவராஜ் பொம்மை முதலமைச்சராக இருந்தபோது 2020ல் வரைவு திட்ட அறிக்கை 9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் தயார் செய்யப்பட்டு நேரில் மத்திய அரசு நீர் வள ஆணையத்தில் வழங்கினார். முதலமைச்சரே நேரில் சென்று காவிரி மேலாண்மை ஆணையத்திலும் வழங்கினார். மத்திய நிர்வள ஆணையம் இது குறித்து முடிவு எடுக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை எனவே வரைவு திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அனுப்பி வைக்கிறேன் என அனுப்பி வைத்தது. காவிரி மேலாண்மை ஆணையம் இது குறித்து விவாதிக்கவோ, பரிசீலிக்கவோ முடியாது என திருப்பி அனுப்பி நிராகரித்து விட்டது. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசால் வரைவு திட்ட அறிக்கை அனுமதிக்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்குகள் சென்ற ஆண்டு 2025 நவம்பர் 13 ஆம் தேதி தள்ளுபடி செய்தது.அப்போது நீதி அரசர்கள் மிகத் தெளிவாக ஒரு மாநிலம் தனக்கான திட்டத்தை தயார் செய்து மத்திய நீர்வள ஆணையத்திடம் அளிப்பதற்கு உரிமை உள்ளது. எனவே அதற்கு தடை விதிக்க இயலாது.இந்த தீர்ப்பை கர்நாடகம் அணை கட்டுவதற்கு ஆதரவாக எடுத்துக் கொள்ளக் கூடாது என தெளிவுபடுத்தி உள்ளது.மேலும் சட்டத்துக்கு உட்பட்டு அணை கட்ட முடியுமா என்பதை மத்திய நீர்வள ஆணையம் முடிவு எடுத்துக் கொள்ளும் என தெரிவித்துள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் மேகதாட்டு அணைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி செய்துவிட்டது என நீதிமன்ற தீர்ப்பை தவறான வகையில் பயன்படுத்தி மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் பாட்டிலிடம் முறையிட்டு ஏற்கனவே அளித்த வரைவு திட்ட அறிக்கைக்கு அனுமதி கோரி கர்நாடக முதலமைச்சர் டி கே சிவகுமார் வலியுறுத்தி இருக்கிறார். உச்ச நீதிமன்றம் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட்டது முதல 15ஆண்டுகளுக்குள் திருத்தம் செய்ய இயலாது என தெரிவித்துள்ளது. வரைவு திட்ட அறிக்கைக்கான தடை விதிக்க மறுத்ததை அணை கட்ட ஆதரவாக எடுத்துக்கொள்ளக் கூடாது என உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. இந் நிலையில் உண்மைக்கு புறம்பாக நீதிமன்ற தீர்ப்பை தவறாக பயன்படுத்தும் டி கே சிவகுமார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமிழக அரசு தொடர வேண்டும். முந்தைய திமுக தலைமையிலான தமிழக அரசு மேகதாட்டு அணைக்கு புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என தன் விருப்பத்திற்கு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது பெற்ற காவிரி உரிமையை பறிகொடுப்பதற்கு சமமாகும். அனைத்து கட்சி கூட்டத்திலோ அல்லது சட்டமன்ற கூட்டத்திலோ விவாதிக்காமல் தன் விருப்பத்திற்கு கடிதம் எழுதியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இக்கடிதம் சட்டவிரோதமானது என தமிழக அரசு சட்டமன்றத்தில் அறிவிக்க முன் வர வேண்டும். எனவே ஜூன் 19ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடரில் மேகதாட்டு வரைவு திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் சட்டப்படி விவாதிக்கவும் அனுமதிக்கவும் முடியாது என்று திருப்பி அனுப்பி நிராகரித்ததை தொடர்ந்து மத்திய நீர்வள ஆணையம் நிராகரிக்க வேண்டும் என்ற தீர்மானம் மட்டுமே மீண்டும் நிறைவேற்ற வேண்டும். முன்னால் திமுக அரசு தான் தோன்றித்தனமாக சட்டவிரோதமாக எழுதிய கடிதத்தை நியாயப்படுத்துவதற்காக ஜோசப் விஜய் தலைமையிலான அரசை சட்டமன்றத்தில் தவறாக பயன்படுத்த முயற்சித்துள்ளது. எனவே எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோளை தீர்மானத்தில் இணைத்தது மிகப்பெரிய வரலாற்றுப் பிழையாகும். அதனை நிராகரிக்க வேண்டும். சட்டமன்றத்தில் மத்திய நிர்வாக ஆணையம் மேகதாட்டு வரைவு திட்டத்திற்கு நிராகரிக்க வேண்டும் என தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு பின்பு அதற்கு முரணாக நடுவர் மன்றம் கோருவது நகைச்சுவையானது. கர்நாடக முதலமைச்சர் செயலை நியாயப்படுத்தும் வகையில் உள்ளது- முந்தைய திமுக அரசின் மேகதாட்டுக்கான நடுவர் மன்றம் வேண்டும் என்று கோருவது உச்ச நீதிமன்றம்,காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பிற்கும்,மத்திய அரசுகளில் வெளியிட்டப்பட்ட அரசாணைகளுக்கும் முரணானது என உணர்ந்து உடனடியாக முதலமைச்சர். அதனை நீக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். அமெரிக்காவோடு மத்திய அரசு வருகிற 23, 24, 25 தேதிகளில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு கையொப்பமிட உள்ளது விவசாயிகளுக்கு எதிரான வேளாண் பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி கொள்கைகள் இடம் பெறக்கூடாது என வலியுறுத்தி ஜூன் 23 இல் டெல்லி ஜந்தர் மந்தரில் சம்யுத்த கிசான் மோர்ச்சா சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது. இப்போராட்டத்தில் நான் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார் .
மேகதாட்டிற்கு புதிய நடுவர் மன்றம் கோருவது சட்டவிரோதமானது மட்டுமின்றி பெற்ற தமிழக காவிரி உரிமை பறிபோகும். காவிரி மேலாண்மை ஆணையம் மேகதாட்டு வரைவு திட்ட அறிக்கையை நிராகரித்ததை பின்பற்றி மத்திய நீர்வள ஆணையம் நிராகரிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அமெரிக்க இந்திய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இந்திய வேளாண்மைக்கு எதிரான ஏற்றுமதி இறக்குமதி கருத்துக்கள் இடம் பெறக்கூடாது என வலியுறுத்தி டெல்லியில் ஜூன் 23 போராட்டம். மன்னார்குடியில் பி ஆர் பாண்டியன் வலியுறுத்தல் .
தமிழர் களம் மாத இதழ்
0
..