பொன்னையில் ஓட்டுநர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு


வேலூர், மார்ச் 23:
வேலூர் மாவட்டம், பொன்னை ஊராட்சி பகுதியில் 'தமிழ்நாடு அனைத்து மாவட்ட ஓட்டுநர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் தொழிற்சங்கம்' சார்பில் பொதுமக்கள் மற்றும் பயணிகளின் தாகம் தீர்க்கும் பொருட்டு கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

பொன்னை மேம்பாலம் அருகே அமைக்கப்பட்ட இந்த தண்ணீர் பந்தலை சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் திறந்து வைத்தனர். இந்நிகழ்விற்கு வேலூர் மாவட்ட ஆலோசகர் இல்வின் அமர்நாத் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் மகேஷ், பொன்னை தலைவர் நரசிம்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்கள்:
இவ்விழாவில் முன்னாப் நிர்வாகிகள் காதர், தசரதன் மற்றும் பொன்னை இலகுரக வாகன ஓட்டுநர்கள், தமிழ்நாடு அனைத்து மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த வழியாகச் சென்ற பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் மோர், இளநீர் மற்றும் குடிநீர் உள்ளிட்ட குளிர்ச்சியான பானங்கள் வழங்கப்பட்டன. கோடை வெயிலின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் ஓட்டுநர்கள் மேற்கொண்ட இந்த சமூக சேவைப் பணியை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.
Previous Post Next Post