ஏழைகளின் குடிசைவீடுகள் இடுப்பு, மக்கள் தவிப்பு, அமைச்சரின் புதிய சொகுசுபங்களா உதயம் அவருக்கு சிரிப்பு


 அதிமுக மகளிர் அணி சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் எஸ் எம் சுகுமார் சாடல்
முன்னாள் அமைச்சர் S. இராமச்சந்திரன் பங்கேற்பு

இராணிப்பேட்டை, ஜன. 4 
இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக மகளிர் அணி சார்பில் தேர்தல் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்எம். சுகுமார் தலைமை தாங்கி உரையாற்றினார்.

அவர் பேசுகையில்,
“ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் இன்று கடுமையான வேதனையில் உள்ளனர். குறிப்பாக விசாரம் அருகேயுள்ள எம்ஜிஆர் நகர், ரபிக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடிக்கப்பட்டு, அப்பாவி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து குழந்தைகளுடன் தவித்து வருகின்றனர்.

இந்த மக்கள் வீடில்லாமல் அலைந்து கொண்டிருக்க, இந்த மாவட்டத்தின் அமைச்சர் R. காந்தி தற்போது புதிதாக பிரமாண்டமான பங்களா வீடு கட்டி சொகுசாக வாழ்ந்து வருகிறார்.
குடிசை வீடுகளை இடித்து, பங்களா வீட்டில் வாழும் இந்த ஆட்சி மக்கள் நலனுக்கான ஆட்சியா என்பதை ராணிப்பேட்டை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்” என்று கடுமையாக விமர்சித்தார்.

மேலும் அவர்,
“இந்த ஆட்சியில் ஏழை எளிய மக்கள் மட்டுமே பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்கள் மட்டும் வசதியான வாழ்க்கை வாழ்கிறார்கள்.
இத்தகைய மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராக மகளிர் அணி ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு வீட்டிலும் உண்மைகளை எடுத்துச் சொல்ல வேண்டும்.
இராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் மகளிர் அணி ஒருங்கிணைந்து செயல்பட்டால், கழக வெற்றியை யாராலும் தடுக்க முடியாது” என்று வலியுறுத்தினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில்,
“ஆற்காடு பிரச்சாரக் கூட்டத்தின் போது, அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்கள் விசாரம் பகுதியில் நடைபெற்ற குடிசை இடிப்புகளை அறிந்து கொண்டு, மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைந்தவுடன் இடம் இழந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி வழங்கப்படும் என்று உறுதியான வாக்குறுதி அளித்துள்ளார்.
அம்மாவின் ஆட்சி அமையும் போது, இந்த வாக்குறுதி கண்டிப்பாக நிறைவேற்றப்படும்” என்று தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர், ஆரணி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் S. இராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மகளிர் அணியினருக்கு ஆலோசனை வழங்கினார்.

அவர் பேசுகையில்,
“புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சியில் மகளிர் நலனுக்காக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதேபோல் அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்திலும் மகளிர் பாதுகாப்பு, சுயதொழில், பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

மகளிர் அணி என்பது கழகத்தின் வலுவான தூணாகும். நீங்கள் ஒவ்வொருவரும் பூத் அளவில் செயல்பட்டு, கழகத்தின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொன்னால், மீண்டும் தமிழகத்தில் அம்மாவின் ஆட்சி அமைவது உறுதி” என்று அறிவுரை வழங்கினார்.

இந்தக் கூட்டத்தில் மகளிர் அணி நிர்வாகிகள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
Previous Post Next Post