இராணிப்பேட்டை:
ஒன்றிய பாஜக அரசின் கைபாவையாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து, வாக்காளர் பட்டியல் “சீறப்பு சீராய்வு” தொடர்பாக SIRஜ எதிர்ப்பு கோஷத்துடன் திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர்
ஆர். வினோத்காந்தி
தலைமை தாங்கினார்
கழக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர், திமுக கொள்கை பரப்பு செயலாளர்
டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி. கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
இந்திய தேர்தல் ஆணையம் பாஜக அரசின் தாக்கத்தில் செயல்படுவதாக
திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் குற்றம் சாட்டினர்
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள்,
மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய மற்றும் நகர பேரூராட்சி செயலாளர்கள்,
மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள்,
உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கழகத்தினர் எனப் பெரும் திரளானோர்
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.