12.06.24
FILE NAME: LOTTERY ARRESTED NEWS.
THENI DISTRICT REPORTER: R.RAJA 9655331932.
தேனியில் தமிழக அரசால் தடை தடை செய்யப்பட்ட லாட்டரிகள் விற்பனை செய்த இரண்டு பேர் கைது செய்து சிறையில் அடைப்பு.!!
தடை செய்யப்பட்ட 1369 லாட்டரி சீட்டுகள், 68,100 ரூபாய் பணம் பறிமுதல்
தேனியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிகள் 1369 சீட்டுகள் மற்றும் பணம் 68 ,100 ரூபாய் பறிமுதல் செய்து
லாட்டரி விற்பனை செய்த தேனி, பிடிஆர் தெரு, நாராயணன் மகன் சந்திரசேகரன் (68) மற்றும் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா, முத்துப்பாண்டிபட்டி, வடக்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஆனந்தன் (30) உள்ளிட்ட இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தமிழக, கேரள எல்லையான தேனி மாவட்டத்தில் தொடர்ந்து தேனி மாவட்டம், கம்பம், புதுப்பட்டி, சின்னமனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட லாட்டரிகள் படு ஜோராக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று தேனி சந்தையில் உள்ள பிராட்வே ப்ரவுசிங் சென்டரில் போலீசார் அதிரடி சோதனை செய்தனர்.
அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிகள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது -
உடனடியாக தேனி காவல்துறையினர் தடை செய்யப்பட்ட லாட்டரிகள் விற்பனை செய்த சந்திரசேகரன் மற்றும் ஆனந்த் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் தேனி மாவட்டத்தில் லாட்டரிகள் விற்பனை செய்யும் முக்கிய குற்றவாளிகளையும் போலீசார் தேடி வருகின்றனர்....