திண்டிவனம், ஒலக்கூர் ஒன்றியம், மாநிலத்தில் சிறந்த பள்ளிக்கான விருது பெற்ற ரோஷணை (இந்து), நகராட்சி தொடக்கப்பள்ளியில் ஆர்வமுடன் மாணவர்கள் சேர்க்கை பெற்றோர்கள் ஆசிரியர்கள் ஊர்வலம்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரோஷணை (இந்து) நகராட்சி பள்ளியில் 2024-25ம் ஆண்டிற்கான *மாணவர்கள் சேர்க்கையும் & இலவச பாடநூல் மற்றும் நோட்டுக்கள் வழங்கும் நிகழ்ச்சி* சிறப்பாக நடைபெற்றது.
*பள்ளி வயது குழந்தைகள் ஐந்து வயது முடிந்த 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். அவர்களுக்கு ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி பூ- கொத்து கொடுத்து வரவேற்றனர். முதல் வகுப்பில் சேர்த்து, பள்ளி வளாகத்தில்... புதிதாய் சேர்ந்த மாணவர்களை மாலையிட்டு, மேளதாளத்துடன் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு, ஆரத்தி எடுக்கப்பட்டு வகுப்பறைக்கு அனுப்பப்பட்டது. இப்பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச புத்தகங்கள் மற்றும் நோட்டுக்கள் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது* இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் மெகராஜ் பேகம், தலைமை தாங்கினார். நகர மன்ற உறுப்பினர் தில்ஷாத் பேகம் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன், அனைவரையும் வரவேற்றனர். சிறப்பு விருந்தினர்களாக திண்டிவனம் நகராட்சி ஆணையாளர் தமிழ்ச்செல்வி அவர்களும், ஒலக்கூர் ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் கிருஷ்ணன் அவர்களும், கலந்து கொண்டனர். சமூக ஆர்வலர் அப்சர், அக்பர், சத்துணவு பொறுப்பாளர் மலர்விழி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அப்பொழுது பெற்றோர்கள் பொதுமக்களும் கூறுகையில் திண்டிவனம் ரோஷணை (இந்து) நகராட்சி தொடக்கப்பள்ளி மாநிலத்தில் சிறந்த பள்ளிக்கான விருதை பெற்ற பள்ளி எனவும் இப்பள்ளியில் கற்றல், கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு மாணவர்களின் கல்வி வளர்ச்சி உள்ளிட்ட பன்முக வளச்சினை வெளிப்படுத்தியமைக்காக இப்பள்ளி சிறந்த பள்ளிக்கான பேராசிரியர். அன்பழகன், விருதும் வழக்கப்பட்டது திருச்சியில் மாநில கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலத்தில் சிறந்த பள்ளிக்கான விருதும் திண்டிவனம் ரோஷணை (இந்து) நகராட்சி தொடக்கப்பள்ளிக்கு இவ்விருது மற்றும் 10. லட்சம் பண முடிப்பும் பள்ளியின் தலைமை ஆசிரியர் வெங்கடேசனை அவர்களை பாராட்டி வழங்கப்பட்டது இப்பள்ளியானது 2020-க்கு முன் மாணவர்களே இல்லாத சூழ்நிலையில் ஏற்பட்டிருந்தது 2020-க்கு பின் தலைமை ஆசிரியராக பணி மாறுதலாக வந்த வெங்கடேசன் அவர்களின் பெரும் முயற்சியால் முதலில் பள்ளிக்கு பாதுகாப்பான சுற்று சுவருடன் கட்டிடம் கட்டப்பட்டது. பிறகு பள்ளிக்கு தேவையான அனைத்து நவீன வசதிகளும் பெற்று பள்ளி வண்ணமயமாக அனைத்து சுவர்களிலும் கற்றல், கற்பித்தல் படங்கள் வரையப்பட்டு பள்ளி வகுப்பறைகள் முழுவதும் குளிரூட்டப்பட்ட வகுப்பறைகளாக மாற்றப்பட்டு மாணவர்களுக்கு நவீன சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஸ்மார்ட் போர்ட் வாசித்தவுடன் ஆங்கில வழி கல்வியுடன் இயங்கும் திண்டிவனம் நகரின் ஒரே (இந்து) நகராட்சி பள்ளியாகும் எனவே நாங்கள் எங்கள் பிள்ளைகளையும் இப்பள்ளியில் சேர்க்க வேண்டுமென குழந்தைகளை சேர்க்க வந்ததாகவும் பெற்றோர்கள் கூறினார்கள் இறுதியாக இடைநிலை ஆசிரியர் அனீஸ்பாத்திமா நன்றி கூறினார்.